×

மேலவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

மதுராந்தகம்:  மதுராந்தகம் அருகே மேலவலம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேலவலம் பகுதியில், சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரசினர் மேல்நிலைப் இப்பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணிக்கு, மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர் வி.நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி முன்னிலை வகித்தார். இதில், கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் திருக்கழுக்குன்றம் மேலவலம் நெடுஞ்சாலை மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தனர்.

அப்போது, தலைக்கவசம் அணியாமலும், செல்போனில் பேசிய படியும், அதி வேகமாகவும், குடிபோதையிலும் வாகனங்களை ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் பயணம் செய்யக்கூடாது. மலை பாதையில் செல்லும்போது, ஏறும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். சாலையில் வாகனத்தை இயக்கும்போது பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வாகனங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும். சாலையில் எப்போதும் வாகனங்களை இடது புறமாகவே இயக்க வேண்டும். மருத்துவமனை பள்ளி, கல்லூரி அருகில் ஒலி எழுப்பக் கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கோஷங்களையும் எழுப்பியவாறு துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்கி சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Melawalam Government Higher Secondary School , Road traffic awareness rally on behalf of Melawalam Government Higher Secondary School
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி