×

ஏர்போர்ட் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம் விவசாய நிலத்தை உருவாக்க முடியாது; சீமான் பேட்டி

காஞ்சிபுரம்: பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நேரடியாக சந்தித்தது, ஏர்போர்ட் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், விவசாய நிலத்தை உருவாக்க முடியாது என்று சீமான் பேசினார். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

இதனை தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசுகையில், ‘இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு  அனைத்து விமானத்தையும் அரசு விற்று வருகிறது. அதானி துறைமுகத்தை கட்டுவது போல், ஏர்போர்ட்டை கூட கட்டலாம். இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம், அதனால் அரசு கட்டி அவரிடம் கொடுக்க போகிறது.
சென்னை விமான நிலையம் சரி இல்லை என்று யாராவது குறை கூறினார்களா? உலகத்திலேயே மிகப்பெரிய வானூர்தி சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில்  ஏன் இந்த வானூர்தி நிலையம். ஏர்போர்ட் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையில் வேர்வையும் ரத்தமும் சிந்தி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Seaman , An airport can be built anywhere; agricultural land cannot be built; Seaman interview
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...