×

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: மீண்டும் ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க தடை

தர்மபுரி: காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடாக அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி வினாடிக்கு 50,000 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதிக நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளா, வயநாடு உள்ளிட்ட பகுதியில் மீண்டும் தொடர்மழை ஏற்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபனி மற்றும் கே.எஸ் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கே.எஸ்.அணையில் இருந்து வினாடிக்கு 19,783 கனஅடியாகவும், கபனி  அணையில் இருந்து 7,000 கனஅடியாகவும், ஆகிய இரண்டு அணையிலிருந்து தமிழகத்திற்கு நேற்று நிலவரப்படி 26,783 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி கரையோர உள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாகவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள்  ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், இன்று நீரின் அளவு படிப்படியா வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அதிக நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், நீர்வார்த்து அதிகாரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      Tags : Okanagan Falls , okanakal, water flow, increase, gift, bathe, ban
× RELATED காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்...