ஒகேனக்கல் காவிரியில் ஆற்றில் பரிசல் இயக்க தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியில் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (26.08.2022) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி நிலவரப்படி, சுமார் 50,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ,

ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன்பிடிப்பதற்கோ, காவிரி ஆற்றின் கரையோரங்களில் நின்று சுயபடம் (Selfie) எடுப்பது, புகைப்படங்கள் எடுப்பதற்கோ, படகு / பரிசல் ஓட்டிகள் பரிசில்களை இயக்குவதற்கோ மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடைவிதிக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: