×

உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் காலிறுதியில் இந்தியர்கள்: சாய்னா, லக் ஷயா சென் தோல்வி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் 27வது உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று காலிறுதிக்கு முந்தைய 3 வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய வீராங்னை சாய்னா நெஹ்வால் 3வது சுற்றில் நேற்று தாய்லாந்து வீராங்கனை புசனன் ஓங்க்பாம்ருங்பன் உடன் மோதினார். அதில் புசனனிடம் 17-21, 21-16, 13-21 என்ற செட்களில் போராடி தோல்வியை சந்தித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய்-லக்‌ஷயா சென் ஆகியோர் நேருக்கு நேர் களம் கண்டனர். அதில் பிரணாய் 17-21, 21-16, 21-17 என்ற செட்களில் போராடி சென்னை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்திய வீரர்கள் எம்.ஆர்.அர்ஜூன்/துருவ் கபிலா இணை சிங்கப்பூர் இணை யாங் கய் டெர்ரி/கீன் ஹஈன் இணையுடன் மோதியது. அதில் இந்திய இணை 58நிமிடங்களில் 18-21, 21-15, 21-16 என்ற செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதியை உறுதிச் செய்தது. அதேபோல் மற்றொரு ஆடவர் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்திய வீரர்கள் சாத்விக்சாய் ராஜ்/ சிராய்க் ஷெட்டி இணை ஒருமணி 15 நிமிடங்களில் 21-12, 21-10 என நேர் செட்களில்  டென்மார்க் இணையான ஜெப் பே, லாஸ்சே மோல்ஹெட் ஆகியோரை வீழ்த்தி அசத்தலாக காலிறுதிக்குள் நுழைந்தனர்.

Tags : Indians ,Badminton World Championship ,Saina ,Luck Shaya Sen , Indians in Badminton World Championship quarter-finals: Saina, Luc Shaya Sen lose
× RELATED போலி கால்சென்டர் மோசடி கொல்கத்தாவில் ஈடி சோதனை