×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்றும் அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

Tags : Okanagan , Increase in flow to Okanagan to 16,000 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி