×

அருணாச்சலில் ஒரே ஜேடியு எம்எல்ஏ பாஜ.வில் ஐக்கியம்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வென்றது. 41 இடங்களில் வென்ற பாஜவுக்கு அடுத்து 2வது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜவுக்கு தாவினர். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு எஞ்சியிருந்த ஒரே எம்எல்ஏ டெசி கசோவும் நேற்று பாஜவில் இணைந்தார். இதன் மூலம் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 49 ஆக அதிகரித்துள்ளது.


Tags : JD ,MLA Baja ,Arunachal ,Unity , JDU MLA joins BJP
× RELATED சட்டப்பேரவை தேர்தல் அருணாச்சல், சிக்கிமில் இன்று ஓட்டு எண்ணிக்கை