×

திருத்தணி, மீஞ்சூரில் பயனாளிக்கு விலையில்லா ஆடுகள்; எம்எல்ஏக்கள் வழங்கினர்

பொன்னேரி: மீஞ்சூரில் 100 பேருக்கு விலையில்லா வௌ்ளாடுகளை துரை சந்திரசேகர் எம்எல்ஏ வழங்கினார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில்  100 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா வௌ்ளாடுகளை வழங்கினார்.  

இதில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி முன்னிலை வகித்தார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளில் இருந்து வந்திருந்த விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்பட 50 பெண் பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் என 250 ஆடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முன்னதாக திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஏரி நீர்பாசன சங்கத்தலைவருமான மகாலிங்கம், திருவாலங்காடு ஒன்றிய துணை தலைவர் சுஜாதா மகாலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் கஞ்சிப்பாடி விஜயகுமாரி சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி பிரபாகர், ஊராட்சி மன்ற தலைவர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருத்தணி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தாமோதரன், மருத்துவர்கள் பிரியலட்சுமி, பிருந்தா, ஆய்வாளர்கள் சுந்தர உதவியாளர் ஐசக் அருள், ஒன்றியக்குழு உறுப்பினர் சி.ஜெயபாரதி, ஒன்றிய நிர்வாகிகள் ஏ.பி.செந்தில்குமார், வி.ஜெகதீசன், பூக்கடை சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மாவதி முருகானந்தம், மதனா ராஜி, நிர்மலா, தணிகைவேல், தாமு, சேகர், கிருபானந்தம், சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Tags : Tiruthani ,Meenjoor , Goats at no cost to the beneficiary in Tiruthani, Meenjoor; Presented by MLAs
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...