×

டிராவிடுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் உள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி நேற்று துபாய் புறப்பட்டு சென்றது. மறு பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியான பிறகு டிராவிட் யுஏஇ செல்வார் என பிசிசிஐ செயல் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

* 3 நபர் நிர்வாகக் குழுவை கலைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரி பிபாவுக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
* ஆசிய கோப்பை டி20 மற்றும் ஐசிசி உலக கோப்பை டி20 போன்ற பெரிய தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், நமது பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்வது அவசியம் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார்.

Tags : Corona ,Dravid , Dravid, Corona,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...