×

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்: சாய்னா முன்னேற்றம்

டோக்கியோ: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். ஹாங்காங் வீராங்கனை செயுங் கான் யி உடன் நேற்று மோதிய சாய்னா (32 வயது), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-19, 21-9 என நேர் செட்களில் வென்றார்.  

இப்போட்டி 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 2வது சுற்றில் சாய்னாவுடன் மோதுவதாக இருந்த நஸோமி ஓகுஹரா காயம் காரணமாக விலகியதால், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேறினார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் த்ரீஸா ஜாலி - காயத்ரி கோபிசந்த், அஷ்வினி பட் - ஷிகா கவுதம் ஜோடிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

Tags : Badminton World Championships ,Saina , Badminton, World Championship, Saina
× RELATED அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு...