×

சீர்காழி பகுதியில் சாகுபடி விற்பனை ஆகாத தர்ப்பூசணி பழங்களை வயலுக்கே உரமாக்கும் விவசாயிகள்

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி, கரைமேடு, புதுத்துறை, சூரக்காடு, மண்டபம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கர் கோடைகால பயிரான தர்பூசணி சாகுபடி செய்யபட்டது. மூன்று மாத கால பயிரான தர்பூசணி மழையின் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக சாகுபடி செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் வெளி மாநில தர்பூசணியை கொள்முதல் செய்து விற்பனையை தொடர்ந்தனர். காலதாமதமாக தொடங்கிய தர்பூசணி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்தும் தொடரும் ஊரடங்கால் தர்பூசணி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யவில்லை.உள்ளூர் விற்பனையாளர் முதல் வெளி மாவட்ட விற்பனையாளர்களும் தர்பூசணி கொள்முதல் செய்ய முன்வராததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். தற்போதைய நிலையில் ஆள் வைத்து பறித்தால் கூலி கொடுக்க கூட முடியாத நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமலே விட்டனர். இந்நிலையில் மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் சாகுபடி பணிக்கு தயாரான சில விவசாயிகள் விளைந்த தர்பூசணி பழங்கள் மற்றும் கொடிகளை டிராக்டர் கொண்டு உழுது வயலுக்கே உரமாக்கி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு தர்பூசணி விவசாயிகளின் மூன்று மாத உழைப்பின் பலனை வயலுக்கே உரமாக்கியது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சீர்காழி பகுதியில் சாகுபடி விற்பனை ஆகாத தர்ப்பூசணி பழங்களை வயலுக்கே உரமாக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai district ,Tiruvali ,Karaimedu ,Puththurai ,Surakadu ,Mandapam ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்