×

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்து 3 நாட்கள் இணையவழி கருத்தரங்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் 24ம் தேதி முதல் 26ம் தேதி 3 நாட்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பற்றிய 3 நாட்கள் பயிற்சியினை வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடத்த உள்ளது.

உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

இதில்18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற இணைதளம் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. 8668102600, 9444557654, 044-22252081, 22252082 ஆகிய எண்களில் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : 3 days e-seminar on Export Import Procedures, Legal Schemes: Tamil Nadu Govt Notification
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...