×

மாயனூர் கதவணையில் இருந்து பாசனத்திற்காக கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறப்பு

கரூர் : கரூர் மாவட்டம் கதவணையில் இருந்து பாசனத்திற்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பாசன பகுதிகளை நோக்கி செல்கிறது. கடந்த ஜூன் 12ம்தேதி டெல்டா பாசன விவசாயின் நலன் கருதி, பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.இந்நிலையில், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு நாட்கள் கழித்து கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் வழியாக மாயனூர் கதவணை சென்றது. அங்கிருந்து சிறிதளவு ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரும், தற்போது வந்து கொண்டுள்ள தண்ணீரும் முக்கொம்பு நோக்கி சென்றாலும், கதவணை பகுதியில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால்களிலும் கரூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அவ்வாறு கதவணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சீறிப் பாய்ந்து கிளை வாய்க்கால்கள் மூலம் பல்வேறு பகுதி பாசன நிலங்களை நோக்கிச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது….

The post மாயனூர் கதவணையில் இருந்து பாசனத்திற்காக கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mayanur ,Kadavava ,Karur ,Karur District ,Kadaval ,Mayanur Pedicle ,Dinakaran ,
× RELATED கரூர்- மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை