×

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்: ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா நகரில் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.  

இந்நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். உடல்நலத்தை பேணிக்காத்தால் கவலைகள், மன சங்கடங்கள் நம்மைவிட்டு ஓடி போகும் என ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  

மேலும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள், குழந்தைகளுக்கிடையில் டென்னீஸ், கூடை பந்து, கைப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.   குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.    

எனக்கு கொரோனா வந்தபோது பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம் எனவும்  எனக்கு வயது 70 ஆனபோதிலும் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : CM ,Happy Streets show ,K. Stalin , Exercise is essential for physical health: Chief Minister MK Stalin's speech at Happy Streets
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...