×

தொடரை கைப்பற்றியது இந்தியா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி..!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2வது போட்டி இன்று நடைபெற்றது. அப்போது டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிய இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது.


Tags : India ,Zimbabwe , India won the series: India won the 2nd ODI cricket match against Zimbabwe..!
× RELATED சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு...