எடப்பாடியை ஆதரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஓபிஎஸ்சிடம் வருவர்: வைத்திலிங்கம் நம்பிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் எம்எல்ஏ நேற்று வருகை தந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது. எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அதிமுகவை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை நோக்கி வந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: