×

நமீதாவுக்கு இரட்டை குழந்தை

சென்னை: நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2017ல் வீரேந்திரா என்பவரை காதலித்து மணந்தார் நமீதா. திருமணத்துக்கு பிறகு நமீதாவுக்கு சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் கர்ப்பமான நமீதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சையில் இருந்தன. இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று ஈஞ்சம்பாக்கத்திலுள்ள இஸ்கான் கோயிலுக்கு கணவர், குழந்தைகளுடன் நமீதா வந்தார். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.


Tags : Namita , Namita has twins
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்