எருமாடு பகுதியில் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்76வது சுதந்திர தின கொண்டாட்டம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே எருமாடு ஆண்டன்சரா பகுதியில் நூறு நாள் வேலைத்திட்ட பணி தளத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அமுதபெருவிழாவாக சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு  ஊராட்சிக்குட்பட்ட எருமாடு ஆண்டன்சரா  பகுதியில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஆண்டன் சாரா பகுதியில் உள்ள குளத்தை ரூ.12 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த  முன்னாள் ராணுவ  வீரர் ரவிச்சந்திரன்  தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் லில்லி  இலியாஸ், துணைத் தலைவர் சந்திரபோஸ் ,ஊராட்சி செயலாளர் சஜித், 100 நாள் வேலைத் திட்டம் பணி பொறுப்பாளர் கோகிலா தேவி, யூனியன் கவுன்சிலர் யசோதா உள்ளிட்ட ஏராளமான 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: