22-வது காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு பரிசுத் தொகை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: 22-வது காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரூ.4.34 கோடி பரிசுத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சரத் கமல்க்கு ரூ.1.8 கோடியும், சத்யன் ரூ.1 கோடியும், சவுரவ் கோசல் ரூ.40 லட்சம் மற்றும் தீபிகா பல்லிகல் ரூ.20 லட்சமும் வழங்கினார்.   இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து மற்றும் ஸ்குவாஷ் வீரர்களின் பயிற்றுநர்களுக்கு ரூ. 51 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Related Stories: