ஐ.எப்.எஸ். நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்...

சென்னை: ஐ.எப்.எஸ். நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தலைமை முகவர் சரவணன் என்பவரை கைது செய்யப்படிருக்க கூடிய நிலையில், தற்போது 6000 கோடி ரூபாய் மோசடி விவகாரம் தொடர்பாக குப்புராஜ், ஜெகநாதன் ஆகிய 2 முகவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிக வட்டி தருவதாக கூறி இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற  நிறுவனம் 4 போலி நிறுவனங்களை உருவாக்கி சுமார் 1 லட்சம் பேரிடமிருந்து 6000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. இது விதி முறைகளுக்கு மீறி வசூல் செய்த காரணத்தால்  இந்த விவகாரம் தொடர்பாக அதிரடியாக பொருளாதார குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்த இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சரவணா குமார் என்பவரிடம் முதற்கட்டமாக முகவர் என்ற அடிப்படையில் கைது செய்தனர்.

சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு இவர் வசூல் செய்திருப்பதாகவும், தமிழகத்தில் இவரை போன்று பல்வேறு முகவர்கள் உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் யார்யாரெல்லாம் எந்த மாவட்டத்தில் முகவர்களாக செயல்பட்டு வசூலில் ஈடுபட்டார்கள் என்ற தகவலை திரட்டி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.  அதன் அடிப்படையில் வேலூரை சேர்ந்த ஜெகநாதன், குப்புராஜ் இவர்கள் இருவரும் பொதுமக்களிடம் அதிகளவு பணத்தை வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஐ.எப்.எஸ். நிறுவன நிர்வாகிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.        

Related Stories: