கனடா ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் பியன்கா, பெலின்டா வெற்றி: கண்ணீருடன் விடைபெற்ற செரீனா

டொரான்டோ: கனடியன் ஓபன் டென்னிஸ் தொடர்(நேஷனல் பாங்க் ஓபன்) டொரான்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த 2வது சுற்று போட்டியில், பெலாரசின் அரினா சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சாரா சொரீப்சை வீழ்த்தினார். ஸ்பெயினின் முகுருசா, 6-4,6-4, என எஸ்டோனியாவின் கையா கனேபியை வென்றார். சீனாவின் கின்வென் ஜிங்கிடம் துனிசியாவின் ஓன்ஸ் ஜாபீர் 1-6 என முதல் செட்டை இழந்த நிலையில், 2வது செட்டில் 1-2 பின்தங்கிய இருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இதனால் ஜிங் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

2ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட், 4-6,4-6 என சுவிட்சர்லாந்தின் ஜில்டீச்மேன்னிடம் தோல்வி அடைந்தார். ஸ்பெயினின் பவுலா படோசா கஸகஸ்தானின் யூலினா புடின்ட்சோவாவுடன் மோதிய நிலையில் முதல் செட்டை 5-7 என இழந்தார். 2வது செட்டில் 0-1 என பின்தங்கிய படோசா காயம் காரணமாக வெளியேறியதால் யூலினா அடுத்தசுற்றுக்குள் நுழைந்தார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப், போலந்தின் இகா ஸ்வியாடெக், கரோலினா பிளிஸ்கோவா, கோகோ காப் ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றி பெற்று கால்இறதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தனர். கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு, 3-6, 6-4, 6-3 என பிரான்ஸ்சின் அலிஸ் கார்னெட்டை போராடி வீழ்த்தினார்.

செரீனா தோல்வி: சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், 6-2,6-4 என அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தினார். 40வயதான செரீனா வரும் 29ம்தேதி முதல் நடைபெற உள்ள யுஎஸ் ஓபன் தொடருடன் டென்னிசில் இருந்துவிலக உள்ளார். இந்நிலையில் கனடா ஓபன் டென்னில் இன்று 2வது சுற்றில் தோல்வி அடைந்த செரீனா கண்ணீருடன் விடைபெற்றார். அவர் கூறுகையில், எனக்கு இங்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும், நான் எப்போதும் இங்கு விளையாடுவதை விரும்புகிறேன். நான் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் ஆனால் பெலிண்டா இன்று நன்றாக விளையாடினார். குட்பை டொரான்டோ, என்றார்.

Related Stories: