×

ரக்‌ஷா பந்தன் பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்‌ஷா பந்தன் பண்டிகையும் ஒன்று. சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‏ஷா பந்தன் பண்டிகை திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags : Modi ,Raksha Bandhan , Raksha Bandhan, Prime Minister Modi, Twitter
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி