ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி அரசின் இமெயிலில் தமாகாவினர் பதிவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை:தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது. தற்பொழுது தமிழக அரசு சார்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அல்லது ஓழுங்குப்படுத்த மக்களிடம் கருத்து கேட்பதற்காக homeses@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, தமாகாவினர் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று தங்கள் கருத்துகளை homeses@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய  வேண்டும்.

Related Stories: