×

ஹாங்காங் வீரர் தர்ணா

செஸ் ஒலிம்பியாடில் நேற்று பங்கேற்ற ஹாங்காங் வீரர் லெள லூட்யான் லூக் 8வது சுற்றில் ஹைத்தி நாட்டு வீரர் குய்லூம் ஜூட் மிர்வென்ஸ் என்பவருடன்  மோதினார். இந்த போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தபோது நடுவர் திடீரென ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹாங்காங் வீரர் லூக், தான் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது நடுவரின் இந்த பாரபட்சமான முடிவை ஏற்க முடியாது என்று கூறி  முதல் அரங்குக்கு அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லூக் தர்ணா பேராட்டத்தை கைவிட்டார். படங்கள்: பாலாஜி

Tags : Dharna , Hong Kong player Dharna
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...