காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் வகையிலும் , கல்விக்கான பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில் விலையில்லா மிதிவண்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயின்ற 5076 மாணவருக்கு, 4475 மாணவர்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 9551 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு பள்ளிகளில் காஞ்சிபுரம் எம்எல்ஏ  எழிலரசன் 1170 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக பிள்ளையார் பாளையம் பள்ளி, ஓரியண்டல் பள்ளி திருப்புகுழிபள்ளி, தாமல் மேல்நிலைப்பள்ளி, கோவிந்தவாடி மேல்நிலைப்பள்ளி, ஈஞ்சம்பாக்கம் என பள்ளிகளில் 668-மிதிவண்டிகளை வழங்கினார். இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி எம் குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் மல்லிகா ராமகிருஷ்ணன், சசிகலா கணேஷ் கமலக்கண்ணன், உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: