நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2ம் ஆண்டையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் மட்டும் 9,59,706 பேர் மருந்து பெட்டகம் பெற்றுள்ளனர். நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றியஅரசு சார்பில் கேட்ட 16 வகையான கேள்விகளுக்கு, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து அதற்கான பதில்கள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நீட் விலக்கு கிடைக்கும் என நம்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: