×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்த்து போராடிய 70 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே வடத்தெருவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை கடந்த 10ம் தேதி வெளியிட்டது. இதை கண்டித்தும், இத்திட்டத்தை கைவிடக்கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை  கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே வடதெரு, கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கீரமங்கலத்தில் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 45 பேர், கறம்பக்குடியில் போராட்டம் நடத்திய 25 பேர் என 70 பேர் மீது கீரமங்கலம், கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியது, கொரோனா ஊரடங்கை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்த்து போராடிய 70 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Union Ministry of Petroleum ,North Street ,Neduvasal ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு பத்திரமாக மீட்பு