×

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு பத்திரமாக மீட்பு

கறம்பக்குடி, ஜூன் 6: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மழையூர் அருகே அறியாண்டி கிராமத்தில் இந்திராணி என்பவருக்கு சொந்தமான கிணற்றில், மேச்சலுக்கு விடப்பட்டிருந்த அவரது மாடு தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. மாடு அலறும் சத்தம் கேட்டு உடனே இந்திராணி சென்று பார்த்து, இதுகுறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.

The post கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Indrani ,Aranandi ,Pudukottai District ,Marshiyur ,
× RELATED கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி