×

கல்வராயன் மலை அருகே மணலாற்றில் வெள்ளப்பெருக்கு: 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு...

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை அருகே உள்ள மணலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் 170கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் கல்வராயன்மலையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணலாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கடும் வெள்ளப்பெருக்கை பொருட்படுத்தாமால், ஆபத்தை உணராமல் மணலாற்றை கடந்து செல்கின்றனர்.

 மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள மேல்பாச்சேரி, தோரடிபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பகுதிகளுக்கு போக்குவரத்து என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தரை பாலத்தை மேம்பாலமாக மாற்றி தர அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவுறுத்திருந்த நிலையில் தற்போது, பெய்த கனமழை காரணமாக இந்த மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   


Tags : Sandalad ,Galvarayan Mountain , Kalvarayanmalai, Manalar, Flooding, Traffic, Damage
× RELATED ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50...