×

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று யுபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. இத்தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. 2022ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 5 ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஸ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது. மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 16ம் தேதி காலை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. 17ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும்,18ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடக்கிறது.

தொடர்ந்து  செப்டம்பர் 24ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 25ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. நாடு முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும்.  மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mains exam for posts including IAS, IPS starts on 16th September: 5 days
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...