துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட்டுக்கு ஜேஎம்எம் ஆதரவு: நாளை மறுதினம் தேர்தல்

ராஞ்சி: எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரான மார்க்கரெட் ஆல்வாவிற்கு ஜார்கண்ட் முக்தி மோர்சா (ஜேஎம்எம்) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி  தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும், ஆளும்கட்சி தரப்பில் ஜெகதீஷ் தன்கரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியானது துணை ஜனாதிபதி தேர்தலில் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கட்சி எம்பிக்கள் ஆல்வாவிற்கு வாக்களிக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான சிபுசோரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு மாநிலங்களையில் 2 எம்பிக்களும், மக்களவையில் ஒரு எம்பியும் உள்ளனர். முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்முவிற்கு இந்த கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

உபி முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Related Stories: