×

ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு தமிழக வனத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் ராம்நகர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதற்கு தமிழக வனத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில்: தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் (கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்) இன்று ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப் போகிறது. இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu Forest Department ,Ramsar , Chief Minister M.K.Stal praises Tamil Nadu Forest Department for increasing the number of Ramsar recognized sites to 10
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...