குற்றாலத்தில் நாளை முதல் சாரல் விழா

தென்காசி: தென்காசி தனி மாவட்டமாக உதயமான பின் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. விழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். 6ம் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் நடக்கிறது. இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து குற்றால அருவிகளில் குளிக்க மூன்றாவது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

Related Stories: