சதுரங்க டிசைனில் பட்டுச்சேலை: காஞ்சி கலெக்டர் வெளியிட்டார்

காஞ்சிபுரம்: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவு பெறுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஆவணப்படம், கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மணல் ஓவியங்கள் என வெளிநாட்டினர் அசந்துபோகும் அளவுக்கு தொடக்கவிழா இருந்தது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் சதுரங்க டிசைனில் தூயப்பட்டு மற்றும் வெள்ளியை பயன்படுத்தி ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சதுரங்க டிசைனில் பட்டுச்சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டு சேலையை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார்.

Related Stories: