×

இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன தகரப்பெட்டி அண்ணாமலை : ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ வைரல்

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு கட்சியில் நடிகர் நட்ராஜ்,‘நாம சொல்லுவது பொய்யா இருந்தாலும், அதுல கொஞ்சம் உண்ம இருக்கணும். அப்போதான் இந்த ஜனங்க நம்மல நம்புவாங்க,’ என்று கூறுவார். ஆனால் அண்ணாமலை பொய்யை மட்டுமே நல்லா சவுண்டாக பேசி வருகிறார். இது பொய்…பொய்… என்று ஆதாரத்துடன் உடனே உடனே நெட்டிசன்கள், எதிர்க்கட்சியினர் பதிலடி தந்தாலும் நான் சொல்வதுதான் உண்மை என்று பேசி வருகிறார். தற்போது மீண்டும் ஒரு பொய்யை சொல்லி மாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் அண்ணாமலை கடந்த 26ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன். எனது மனைவி அதே கல்லூரியில் எனக்கு ஒரு ஆண்டு ஜூனியராக படித்தார். நாங்கள் இருவரும் மணம் புரிந்து கோவையில் வாழ்ந்தோம். கோட்டா சிஸ்டத்தில் அண்ணாமலை வரல. கோட்டா சிஸ்டத்தில் வானதி அக்கா வரல. கோட்டா சிஸ்டத்தில் மோடி வரல.

கோட்டா சிஸ்டத்தில் யாரும் வரல. அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவருடைய தந்தையின் எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கினார். நான் 2 தகரப்பெட்டியுடன் கோவைக்கு வந்தேன்’ என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி தந்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், எங்க அப்பா இறக்கும்போது எனக்கு 11 வயது. நான் எப்படி எம்எல்ஏ கோட்டாவில் சீட் வாங்க முடியும். களங்கம் ஏற்படுத்திய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘நான் கூறியது என்னுடைய கருத்து. இதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கூறினார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ‘நாங்க எல்லோருமே இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் தான். அதில் பயனடைந்திருக்கோம். கடந்த 2010 பேட்ஜ்ல ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டில்தான் ஐபிஎஸ் தேர்வானேன்,’என்று கூறியுள்ளார். இந்த 2 வீடியோக்கைளை இணைத்து அதன் கீழே, ‘கோவை மக்களே இப்படி, பொய், பொய்யா பேசுபவருக்காக உங்கள் ஓட்டு’ என்று எழுதி பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன தகரப்பெட்டி அண்ணாமலை : ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Chaturanga ,Vedati ,Natraj ,Annamalai ,
× RELATED 2 கோடி பார்வைகளை தொட்ட கங்குவா