×

கர்னூலில் கனமழையால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு

திருமலை : கர்னூலில் பெய்து வரும் கனமழையால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறு, ஏரி மற்றும் கால்வாய்கள் நிரம்பி வருகின்றன.மேலும், 100க்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

நந்திகொட்கூர், மராத்திநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.  பிராமண கோட்கூரில் பெய்து வரும் கனமழையால் ஓடைகளில் வெள்ளநீரில்  செல்கிறது. இதனால், 100க்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.  இந்நிலையில், நேற்று காலை கல்லூர் அடுத்த நெலவாடா அருகே, அதே கிராமத்தை சேர்ந்த மட்டிலெட்டி என்ற கூலித்தொழிலாளி 4 பேருடன் இணைந்து ஆற்று ஓடையை கடந்து கர்னூலுக்கு செல்ல முயன்றனர்.

அப்போது, மட்டிலெட்டி தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடன் வந்த 4 தொழிலாளர்கள்  அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இருப்பினும், ஓடையில் மட்டிலெட்டி அடித்து செல்லப்பட்டார். சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் மட்டிலெட்டி சடலமாக கரைஒதுங்கி கிடந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் கல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kurnool , Thirumalai: A laborer who was swept away by a stream caused by heavy rains in Kurnool was recovered as a dead body.
× RELATED ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன்...