75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்: சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி..!!

சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின கொண்டாடங்கள் மெரினா கடற்கரையில் நடைபெறுவது வழக்கம், அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்நிகழ்ச்சிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை கண்டு ரசிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என்று தகவல்கள் வெளியாகியது.

Related Stories: