ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நடவடிக்கை பாயும்: தொழிலாளர்களுக்கு எம்டிசி எச்சரிக்கை

சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்டிசி எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை : அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கமானது 14வது, ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரி 22 அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்டு அதனை நிறைவேற்றிட வேண்டி, வரு 3.8.2022 (இன்று) அன்றோ அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம் போல பணிக்கு வர வேண்டும். அந்நாளில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையானண விதிகளின்படி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

Related Stories: