×

பெட்டிக்கடையில் வியாபாரம் செய்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற நபர் கைது

பெரம்பூர்: பெட்டிக்கடையில் இருந்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (52). இவர் ஓட்டேரி திருவிக.தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி இவரது பெட்டி கடைக்கு வந்த ஓட்டேரி பிரிக்ளின் ரோடு பகுதியை சேர்ந்த குமார் (எ) குள்ள  குமார் (57) என்பவர் ரேணுகாதேவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி போட்டுள்ளார்.

ஆனால் தீ சரிவர எரியாததால் ரேணுகாதேவி சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரேணுகாதேவி வீடு திரும்பிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ரேணுகாதேவி கொடுத்த புகாரின்படி, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்குபதிவு செய்து குமாரை தேடி வந்தார். இந்தநிலையில் ஓட்டேரி பகுதியில் சுற்றித்திரிந்த குமாரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : A man who tried to burn a woman who ran a box shop by pouring kerosene on her was arrested
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...