×

பக்காசூரன் காட்சி முனையை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை

குன்னூர்:  குன்னூர் அருகே உள்ள பக்காசூரன் காட்சி முனை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பக்காசூரன் காட்சி முனை பகுதி. இந்த பகுதியை சுற்றி நான்கிற்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.  பக்காசூரன் பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதி நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் வட்டாரத்தின் கடைசி பகுதி என்பதால் பள்ளத்தாக்கு நிறைந்து காணப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால் இந்த பகுதியில் காட்சி முனை அமைக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் சிறு கடைகள் உள்ளிட்ட வியாபாரங்கள் செய்து வந்தனர். நீண்ட காலமாக சாலை வசதியின்றி காணப்பட்டதால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைய துவங்கியது. இதனால் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பகுதியில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறையினர் பக்காசூரன் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மீண்டும் சுற்றுலா தலமாக அறிவித்தால் அங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என பழங்குடி மக்கள் தெரிவித்து வருகின்றனர். முறையான பாதுகாப்பு வழங்கி வனத்துறையினர்  நடவடிக்கைகள் எடுத்து இந்த பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்தால் மாவட்டத்திற்கு வருமானம் கூடும் மேலும் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பக்காசூரன் பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: குன்னூரில் லேம்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தலமாக உள்ளது.  அங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் அங்கிருக்கும் மக்கள் சிறு கடைகள் வைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அதே போல் பக்காசூரன்  காட்சி முனை பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்தால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உயரும்.  பக்காசூரன் பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.  இயற்கையை‌ காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால் இந்த பகுதியில் காட்சி முனை அமைக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் சிறு கடைகள் உள்ளிட்ட வியாபாரங்கள் செய்து வந்தனர்.

நீண்ட காலமாக சாலை வசதியின்றி காணப்பட்டதால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைய துவங்கியது. இதனால் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பகுதியில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறையினர் பக்காசூரன் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.  மீண்டும் சுற்றுலா தலமாக அறிவித்தால் அங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என பழங்குடி மக்கள் தெரிவித்து வருகின்றனர். முறையான பாதுகாப்பு வழங்கி வனத்துறையினர்  நடவடிக்கைகள் எடுத்து இந்த பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்தால் மாவட்டத்திற்கு வருமானம் கூடும் மேலும் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Pakasuran display node Request for declaration as a tourist destination
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...