புதுச்சேரி அருகே சின்ன கோட்டக்குப்பம் திருவிழாவில் பதற்றம்: தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர்...

பாண்டிச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் பச்சை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கரகம் எடுத்து வந்த பக்தர் ஒருவர் அக்னி குண்டத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் பின்புறம் வந்த பக்தர்களும் தவறி விழுந்ததில் நெருப்பு பொறி பறந்து கூடியிருந்த நான்கு பக்தர்கள் மீது பட்டதால் பதற்றம் நிலவியது. காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு  சிகிச்சைகாக  மருத்துவமனையில் சேர்த்தனர். கோயில் கரகம் எடுத்து வந்த பக்தர்கள் அக்னி குண்டத்தில் விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டுக்கோட்டை அருகே மழை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நாட்டிய குதிரையின் நடனத்துடன் வெகு விமர்சியாக நடந்தது. தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை மழை மாரியம்மன் கோயில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமர்சியாக நடந்தது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க நாட்டிய குதிரையின் நடனத்துடன் நடந்த தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மாங்கனாபட்டி மலை பகுதியில் சின்ன கன்னிமார் வில்லுக்காரன் கோயில்களில் புரவி எடுப்பு விழா நடந்தது. விழாவின் மாங்கனாபட்டி காளியம்மன் கோயிலிருந்து விநாயகர், வில்லுக்காரன், சின்ன கன்னிமார், கிருஷ்ணர், குதிரை, ஆடு, மாடு, நாய், கோழி, மனித உருவம் உள்ளிட்ட சுடுமண் சிலைகளை பக்தர்கள் தங்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். இதேபோல் வேல், சூலாயுதம், வில், அம்புகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.   

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் உடையார்குடி மாரியம்மன் கோயில் தீமிதி விழா நடந்தது. பக்தர்கள் பால் காவடி, அருட்கண்ட காவடி, செடல் ஆகியவற்றை எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வடவாற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன் பக்தர்கள் தீச்சட்டி கையில் ஏந்தி கொண்டு ஆலயத்திற்கு வந்தனர். சுமார் 5000கும் மேல் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகம் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது. அப்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம், அழகு போடுதல், பாடை பிராத்தனைகள் உள்ளிட்டவற்றை செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கடம்பாடி மாறி சின்னம்மன் ஆலய ஆடிப்பூர தீ மிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. பக்தர்கள் கோயில் தெப்பக்குளத்தில் நீராடி மஞ்சள் நிற ஆடை உடுத்தி கழுத்தில் மாலையுடன் தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

Related Stories: