×

முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது பட நிறுவனம் சார்பில் 1947 என்ற படத்தை இவர் தயாரித்து வருகிறார். பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்பு, கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு முருகதாஸ் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சிம்புவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் முருகதாஸ். அந்த கதை தனக்கு பிடித்திருந்தால் அதில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான், சல்மான்கான் இணைந்து நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் பரவியுள்ளது.

Tags : Simbu ,Murugadoss , Simbu directed by Murugadoss
× RELATED அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது