ஊராட்சி தலைவர் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர் படங்கள் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், அ.புதுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு வீட்டு வரி ரசீதை அழகாபுரி ஊராட்சி தலைவர் வழங்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ஊராட்சித் தலைவர்கள் அரசியல் பின்புலத்தில் இயங்கக்கூடாது என்பதை பின்பற்ற வேண்டும்.

ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பொது அலுவலக பயன்பாட்டில் உள்ளோர், தங்களது அலுவலக தொடர்புக்கான பயன்பாட்டில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தவில்லை என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். வீட்டுவரி ரசீது வழங்குவதில் உள்ள தவறை சரி செய்து மனுதாரருக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து ஆக.4ல் அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: