×

விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள் வாட்டிய வெயிலில் உற்சாக குளியல்: இரவில் குளிக்க தடை

தென்காசி:  விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வாட்டிய வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக குற்றாலத்தில் இந்தாண்டு ஜூலை மாதம் சீசன் களைகட்டியது. இம்மாதம் முழுவதும் அனைத்து அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. காலையில் வெயிலும், மாலையில் இதமான சூழல் என்று மாறி, மாறி நிலவி வருகிறது. ஒரு சில நாட்களில் மழையும் கொட்டி தீர்த்தது. இதனால், அருவிகளில் தண்ணீர் குறைவின்றி விழுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாரல் இல்லை. ஆனால், மாலையில் இதமான காற்று வீசியது. சாரல் இல்லாத போதும் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மெயின் அருவியில் பெண்கள் பகுதியில் மட்டும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். பழைய குற்றால அருவியிலும் வரிசையில் நின்று குளித்தனர். ஐந்தருவியில் வரிசை இல்லாமல் குளிக்க ேபாலீசார் அனுமதித்தனர். இந்நிலை யில் செங்கோட்டை அருகே அச்சன்கோயில் கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவர் இறந்ததையடுத்து குற்றாலத்தில் மெயின ருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

Tags : Kurthalam , As it was a holiday, they gathered at the court Tourists are spoiled Enthusiastic bathing in the sun: No bathing at night
× RELATED தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில்...