×

காங்கயம் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம் : காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.20 லட்சத்திற்கு விற்பனையானது.காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை  கொண்டு வருகின்றனர்.

 தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவாசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று 81 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 55 கால்நடைகள் ரூ.20 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
Tags : Kangayam ,Old Kottayam , At Old Kottayam Mattuthavani near Kangayam Gangayan cows Selling for Rs.20 lakhs
× RELATED காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்