×

2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பு

விருதுநகர்: ஆடிப்பூரத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிமாதம் பூரம் நட்சத்திரம் அன்று ஆடிப்பூரம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஆடிப்பூரத் திருவிழா கடந்த 27 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளி 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்று வரும் தேரோட்டத்தை அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதேபோல் செய்யாறு, அண்ணாநகர் பகுதியில் உள்ள அஷ்ட பூஜ துர்கையம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் சீர்வரிசை வழங்கப்பட்டது. தொடர்ந்து, அஷ்ட பூஜ துர்க்கையம்மனுக்கு 5 வகையான உணவுகள் படைக்கப்பட்டு, அவை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை கிராமத்தில் உள்ள மூலஸ்தம்மன் கோயிலில் ஆடி மாத கூழ் வார்த்தல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 


Tags : 2 years, Srivilliputhur, Andal Temple, Adipuram Therottam, devotees, joy
× RELATED கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை...