×

தமிழகத்தில் மரத்தடியில் பாடம் படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 2,500 புதிய வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சேலம்: சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, இதற்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. பேராசிரியர் அன்பழகனார் அறக்கட்டளை சார்பில், முதற்கட்டமாக மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்களுக்காக 2,500 புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு துவங்கி உள்ளது. இதுதவிர 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அருகே உள்ள பாலாஜி கல்லூரியில் நேரடி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டருக்குள் உள்ள எந்த பள்ளிகளிலும் சேரலாம். மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் செலவை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu , Construction of 2,500 new classrooms for school students studying under trees in Tamil Nadu: Minister Mahesh Poiyamozhi interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...