×

நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு

நாகப்பட்டினம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி  (29.07.2022) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம்,  துளசியாப்பட்டினத்தில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஔவையார் விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஔவை விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் கிராம மக்களால்  கொண்டாடப்பட்டு வந்த ஔவை விழா  2005 ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில்  அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர்  திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து  இன்று நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தினை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.ஜெ.குமரகுருபரன், இ.ஆ,ப., மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், இ.ஆ,ப.,  தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் .என். கௌதமன்,  இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொன். ஜெயராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


Tags : Minister ,P. Kanakaruthi Kumar ,Tamil Muthatti Auvaiyar ,Nagapattinam District ,Tulsiapattinam District ,K. Segarbabu , Mani Mandapam, Tamil Mudhati Auvaiyar, Tulsiapatnam, Nagapattinam District, Minister P.K. Shekharbabu study
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...