×

கனமழை நீடிப்பு: கும்பக்கரை அருவியில் குளிக்க தொடரும் தடை

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் கனமழையால், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.தற்போது தொடர்ந்து கனமழை பெய்வதால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக சரக அதிகாரி டேவிட் ராஜ் அறிவித்துள்ளார்.

Tags : Kumbakkar , Continued heavy rains: Bathing ban at Kumbakkarai Falls continues
× RELATED பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென்...