×

தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகம்: சவரன் ரூ38,440க்கு விற்பனை

* 7 நாளில் ரூ1400 உயர்ந்தது
* நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக 7 நாட்களில் சவரனுக்கு ரூ1400 வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் நகை வாங்குவோர் அதிர்ச்சிடைந்து வருகின்றனர். தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றிய அரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ1000 வரை உயர்ந்தது. அதன்பிறகு தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த 21ம் தேதி ஒரு சவரன் ரூ37,040க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 22ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

22ம் தேதி ஒரு சவரன் ரூ37,440, 23ம் தேதி சவரன் ரூ37,568, 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 25ம் தேதி சவரன் ரூ37,760, 26ம் தேதி சவரன் ரூ37,824, 27ம் தேதி ரூ37,880 என்றும் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது  கிராமுக்கு ரூ32 அதிகரித்து ஒரு கிராம் ரூ4767க்கும், சவரனுக்கு ரூ256 உயர்ந்து ஒரு சவரன் ரூ38,136க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ38 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,805க்கும், சவரனுக்கு ரூ304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,440க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ1400 வரை உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலை ஏற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடை செய்துள்ளது.

Tags : Savaran , Gold prices continue to jet pace: Savaran sells at Rs 38,440
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...